திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

திருப்பதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று அதிகாலை வி.ஐ.பி. தரிசனத்தில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
Published on

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு நேற்று வந்தார்.

மாலை 7 மணி அளவில் திருமலைக்கு வந்த அவரை ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையின் முன், திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர், துணை கலெக்டர் நிஷாந்த் குமார் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணாவும் வரவேற்றார். பின்னர், அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

இரவு திருமலையில் தங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை 5 மணியளவில் தனது மனைவி ராதா மகன் மிதுனுடன் வி.ஐ.பி. தரிசனத்தில் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தேவஸ்தானம் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

சாமி தரிசனம் முடிந்து 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வெளியே வந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com