டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது- தேர்தல் ஆணையம் வாதம்

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது- தேர்தல் ஆணையம் வாதம்
Published on

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், அவரது கட்சிக்கு பொது சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர்  சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அந்த சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கைவிரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாதிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com