உள்ளாட்சி தேர்தல் - தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னம்

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேல்முருகன்
வேல்முருகன்
Published on

சென்னை:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com