டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- மணிமண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவையொட்டி, திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை
டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை
Published on

திருச்செந்தூர்:

பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இமாலய சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 85-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்த னாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் ரூ. 1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதனை கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 24-ந் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், அவரது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், இன்பதுரை, அறங்காவலர் குழு தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார்,

திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தாசில்தார் ஞான்ராஜ், திருச்செந்தூர் யூனியன் சேர்மன் செல்வி வடமலை பாண்டியன்

மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், இளைஞரணி செயலாளர் வீரபாகு, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், இளைஞரணி துணைச்செய லாளர் வலசை வெயிலுமுத்து, கல்லூர் வேலாயுதம், வக்கீல் பழனி சங்கர், ஜெயக்குமார், மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், மகளிர் அணி குருத்தாய்,பகுதி செயலாளர் நட்டார் முத்து, ஜெய்கணேஷ், வட்ட செய லாளர்கள் முருகன், பகுதி வர்த்தக பிரிவு செயலாளர் பட்டுராஜா, பகுதி இளை ஞரணி செயலாளர் திருச் சிற்றம்பலம், மனுவேல் ராஜ், மற்றும் பிராங்ளின், அனில் ராஜ், ஒன்றிய செயலாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com