பணமதிப்பு நீக்கத்துக்கு எதிர்ப்பு: கோவையில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கோவையில் டாடா பாத்தில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே பணமதிப்பு நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணமதிப்பு நீக்கத்துக்கு எதிர்ப்பு: கோவையில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Published on

கோவை:

பணமதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவையில் டாடா பாத்தில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.

கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் தமிழ்மணி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பைந்த மிழ்பாரி, முன்னாள் மாவட்ட செயலாளர் நாச்சி முத்து, விவசாய அணி அமைப்பாளர் பையா கவுண்டர், மேட்டுப்பாளையம் டி.ஆர். சண்முகசுந்தரம், இலக்கிய அணி அமைப்பாளர் திராவிட மணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கருப்பு சட்டை அணிந்து வந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com