அரசுக்கு 7 முக்கிய ஆலோசனைகள் வழங்கிய ஸ்டாலின்

கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற 7 முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு கொண்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், சாவு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எந்தவித அறிகுறியும், வேறு எந்த நோய் தொற்று இல்லாதவர்களும் மருத்துவமனையில் சேர்ந்த ஒன்றிரண்டு நாட்களில் உயிரிழக்கும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.  இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக  இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற 7 முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.  பல்துறை வல்லுநர்கள்  கருத்துக்களைக் கேட்டு முதல்வரின் கவனத்திற்கு ஆலோசனைகளை அளிப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   கொரோனா தொற்று கிராமப்புறங்களில் பரவலாக மாறிய நிலையில் பல்வேறு மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 7 முக்கிய ஆலோசனைகள் :

மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதார இழப்பை சமாளிக்க அனைவரின் கையிலும் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை தேவை.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசிய தேவைகளுக்காக குறைந்தபட்சம் தலா ரூ.5000 வழங்க வேண்டும்.

பொதுமுடக்க காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களும், மக்களும் வேறு இடத்திற்கு செல்வதை முறைப்படுத்த வேண்டும்.

மக்கள் செல்வதற்கும், நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஆண்டுக்கு 250 நாட்களாக உயர்த்த வேண்டும்.

மூலதனச் செலவினங்களை சுகாதாரத் துறையிலும், தேவையான பிற சேவைகளிலும் அதிகரிக்க வேண்டும்  

போன்ற கருத்துக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com