தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு கோவை வருகை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு கோவை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். #mkstalin
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு கோவை வருகை
Published on

கோவை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு கோவை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இரவு 8.30 மணிக்கு கோவை வரும் அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் அவினாசி சாலையில் உள்ள லீமெரிடியன் ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் செல்கிறார். 

இதுதொடர்பாக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கரூரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு கோவை வருகிறார்.

அவரை வரவேற்பதற்காக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், தைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர் கள், நிர்வாகிகள் அனைவ ரும் திரளாக விமான நிலையத்துக்கு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #mkstalin

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com