நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தச்சநல்லூரில் மகளிர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

சிந்துபூந்துறையில் தி.மு.க. மகளிர் தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர் விஜிலா சத்தியானந்த் முன்னிலை வகித்தார்.
உறுப்பினர் சேர்க்கை முகாமில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் பங்கேற்ற காட்சி. அருகில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாமில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் பங்கேற்ற காட்சி. அருகில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
Published on

நெல்லை:

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில் தச்சநல்லூர் பகுதிக்கு உட்பட்ட சிந்துபூந்துறையில் மகளிர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர் விஜிலா சத்தியானந்த் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.வி.சுரேஷ், கிரிஜா குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டி யன், தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணி யன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் நவநீதன், மாவட்ட பிரதிநிதி இசக்கி பாண்டியன், மாநகரத் துணைச் செயலாளர் அப்துல் கையூம், தொண்டரணி அமைப்பாளர் தொப்பி மைதீன், மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மகளிர் தொண்டரணி தலைவி பத்மா, மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் தேவிகா, விமலா, மகளிரணி துணை அமைப்பாளர்கள் வள்ளியம்மாள், சாகிரா, மாமன்ற உறுப்பினர்கள் கோகிலவாணி, ராஜகுமாரி, சகாய ஜூலியட் மேரி, வசந்தா, அமீர் பாத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com