முனியப்பன் கோவிலில் கிடா வெட்டி விருந்து வைத்த விஜய் ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர்.சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
கிடா விருந்து தயாரான காட்சி.
கிடா விருந்து தயாரான காட்சி.
Published on

சின்னசேலம்:

நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம், நகரம் சார்பில் புதிய பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து நைனார்பாளையம் முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கிடா வெட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர்.

இதில் ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர். இந்த விருந்து சின்னசேலம் ஒன்றிய தலைவர் செல்வசுதா, நகரத் தலைவர் கில்லி செல்வம், ஒன்றிய அமைப்பாளர் மகேந்திரன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது மேலும் கட்சி நிர்வாகிகளிடையே 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் ஏராளமான ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com