தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு- தேதி அறிவிப்பு

தமிழகத்தில் ஜனவரி மாதம் 10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது.
கோப்பு புகைப்படம்
கோப்பு புகைப்படம்
Published on

சென்னை:

ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்தாகி விடுமோ என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் திருப்புதல் தேர்வு தொடங்கி விடும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதற்கட்ட திருப்புதல் தேர்வுகளுக்கான தேதியை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

இதன்படி, 12-ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும், 10-ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com