

சென்னை:
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும். கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
* அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.
* அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
* ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து. வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்.
* அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்.