களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டிரைவர் பலி

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபா பலியானார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

களக்காடு அருகே உள்ள நாகல்குளம் கீழ தெருவை சேர்ந்தவர் ராஜகுட்டி(வயது 34). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலன்குளம் அம்மன்கோவில் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜகுட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com