மேலப்பாளையத்தில் தூய்மை பணியை மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா ஆய்வு செய்த காட்சி.
உள்ளூர் செய்திகள்
ரம்ஜான் தொழுகையை முன்னிட்டு மேலப்பாளையம் பகுதியில் சிறப்பு தூய்மை பணி
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் சிறப்பு தூய்மைப்பணிகள் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவு படி மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனை படி மேலப்பாளையம் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள் மற்றும் தொழுகை நடைபெறும் இடங்களில் தூய்மை பணியாளர்கள் மூலமாக தூய்மை பணி நடைபெற்றது.
மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெறும் தொழுகையை முன்னிட்டு சிறப்பு தூய்மை பணி நடைபெற்றது.
இதனை மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா ஆய்வு செய்தார்.
அப்போது சுகாதார ஆய்வாளர் நடராஜன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

