

விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.
இந்த வார்டுகளில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்கமுத்து, சித்ரா, சூரியகலா, வெற்றிவேலன், உமா ராணி ஆகிய 5 பேரும், ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வனிதா என்பவரும் என 6 பேர் வெற்றி பெற்றனர்.
இதே போல் அ.தி.மு.க. வினர் 4 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 வார்டு களிலும் வெற்றி பெற்றனர். 8 இடங்களை பெறும் கட்சிக்கே பேரூராட்சி தலைவர் பதவி கிடைக்கும். ஆனால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை இருந்தது.
இந்நிலையில் 1-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிருந்தா தேவி, மார்க்கண் டேயன் எம்.எல்.ஏ. முன் னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
இதே போல் 2-வது வார்டில் வெற்றி பெற்ற தினகரன், 5-வது வார்டு முத்துலட்சுமி, 9-வது வார்டு மாரியம்மாள், 14-வது வார்டு பச்சைமலை ஆகிய 4 சுயேட்சைகளும் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதனால் அக்கட்சியின் பலம் 11 ஆக உயர்ந்தது. இதன் மூலம் புதூர் பேரூராட்சியை தி.மு.க. தன் வசம் ஆக்கி உள்ளது.