டாக்டர்.அசோக்குமார்
உள்ளூர் செய்திகள்
தமிழக காங்கிரஸ் மருத்துவ அணி மாநில துணை தலைவராக அசோக்குமார் நியமனம்
தமிழக காங்கிரஸ் மருத்துவ அணி மாநில துணை தலைவராக அசோக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்குடி:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மருத்துவ அணியின் மாநில தலைவர் டாக்டர் எம்.பி. கலீல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆசியுடனும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவ அணியின் மாநில துணைத் தலைவராக டாக்டர். வி.அசோக்குமார் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டாக்டர் வி.அசோக்குமார் மருத்துவ படிப்பை முடித்து இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு பயிற்சி பெற்றவர். கோட்டூர் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பொறுப்பு வகித்தவர்என்பது குறிப்பிடதக்கது.

