

சென்னை:
தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல்நலனும் உள்ளநலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் #DoctorsDay வாழ்த்துகள்!
மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்துகொடுக்கும் என உறுதி அளித்துள்ளார்.