ஷேன் வார்னே மறைவு அதிர்ச்சி அளிக்கிறது- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஷேன் வார்னே மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஷேன் வார்னே மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின் திடீர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஷேன் வார்னே வெகு விரைவாக பிரிந்து சென்றுவிட்டார் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஓர் உண்மையான விளையாட்டு மேதையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கிரிக்கெட் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com