தண்ணீர் தொட்டியில் விழுந்து மாணவர் பலி

ஆத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து மாணவர் பலியானார்.
.
.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மனைவி நித்தியகல்யாணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அம்மையப்பன் சென்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சந்திரமதியழகன் (15) பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்,  நேற்று வழக்கம் போல் அவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தினமும் மாணவன் சந்திரமதியழகன் குளித்தார்.

அப்போது தொட்டியின் சுற்றுச்சுவரில் தலை பகுதியில் வேகமாக மோதியதில் தொட்டியில் உள்ள தண்ணீரில் மயக்கமான நிலையில் இருந்ததை கண்ட பெற்றோர்கள் உடனடியாக மாணவனை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் ஊரக போலீசார் மாணவன் சந்திரமதியழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com