கீழக்கரையில் வாகன தணிக்கை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கீழக்கரையில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கீழக்கரை நகராட்சி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கீழக்கரை நகராட்சி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Published on: 

கீழக்கரை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  அடுத்தமாதம்(பிப்ரவரி) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. ரூ.50ஆயிரத்திற்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தேர்தலையொட்டி பணப்புழக்கம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துணை தாசில்தார் பழனிகுமார் தலைமையில், வருவாய் ஆய்வாளர் காசிநாததுரை, எஸ்.ஐ. ராஜசேகர் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள்  வாகனங்களை  நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். 

வியாபாரிகள்  ஆவணங்கள் இல்லாமல் ரூ.50ஆயிரத்திற்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்று பறக்கும்படை அலுவலர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com