புஸ்சி ஆனந்த் பிறந்த நாள்: நடிகர் விஜய் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.நகர பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
புஸ்சி ஆனந்த் பிறந்த நாள்: நடிகர் விஜய் வாழ்த்து
Published on

புதுச்சேரி:

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு இன்று பிறந்தநாளாகும்.

தனது பிறந்தநாளை புஸ்சி ஆனந்து இன்று புதுவை சின்ன மணிக் கூண்டு அருகில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினார். அவருக்கு செல்போன் மூலம் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

புதுவையை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவர் பிறந்தநாளை யொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜய் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்தனர். பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் அவர்கள் வந்தனர்.

புதுவை ரெயில் நிலையம் அருகிலிருந்து தமிழகத்தின் மாவட்டம் வாரியாக பேண்டு வாத்தியம், மேள தாளங்கள் முழங்க ஊர்வலாக புஸ்சி ஆனந்து வீட்டுக்கு அவர்கள் வந்தனர்.

அங்கு அவருக்கு ஆளுயர மாலை, பூங்கொத்து, பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். சில மாவட்டங்களில் இருந்து கேக் அளித்து பிறந்தநாள் வாழ்த்து தெரி வித்தனர்.

கேக்கை அவர் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி னார். தொடர்ந்து பல பகுதிகளில் இருந்தும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் வருகையால் நகர பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி புஸ்சி ஆனந்து, சின்னசுப்பராய் வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com