search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேச்சேரி, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய  அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு
    X

    கரும்பு சாலையூர் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ ஸ்மார்ட் போர்டு வழங்கிய போது எடுத்த படம்.

    மேச்சேரி, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு

    • கரும்பு சாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதேபோல் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துக்குளி அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட கரும்பு சாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஸ்மார்ட் போர்டினை பள்ளிக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரி யர்கள், மேச்சேரி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மேச்சேரி ராஜா, பாமக வடக்கு ஒன்றிய செயலாளர் அக்னி சுதாகரன், ஒன்றிய தலைவர் விஜயகுமார், பொருளாளர் ஜெயந்தி பிரகாஷ், வன்னியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் கோபால், இளைஞர் அணி மல்லிகார்ஜுன், பரமசிவம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துக்குளி அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் எம்.சி. மாரியப்பன், பாமக ஒன்றிய செயலாளர் சசிகுமார், கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×