முக்காணி சிவாலயத்தில் மகா சிவராத்திரி வழிபாடு

மகா சிவராத்திரி தினமான இன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற இருக்கிறது.ஏற்பாடுகளை மகா சிவராத்திரி கமிட்டி, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
முக்காணி சிவாலயத்தில் மகா சிவராத்திரி வழிபாடு
Published on

அத்தூர்:

முக்காணி நதிக்கரை ராமபரமேஸ்வரர் சமேத பர்வதவர்த்தினி அம்பாள் கோவிலில் மகா சிவராத்திரி தினமான இன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி முதலாம் கால பூஜை இரவு 9.30 மணிக்கு தொடங்கி, 2-ம் காலம் இரவு 12.30 மணிக்கும், 3-ம் காலம் 2.30 மணிக்கும் 4-ம் 04.30 மணிக்கும் மஹா சிவராத்திரி பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை முக்காணி ராம பரமேஸ்வரர்- பர்வத வர்த்தினி அம்பாள் கோவில் மகா சிவராத்திரி கமிட்டி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com