அ.ம.மு.க. தெற்கு மாவட்டசெயலாளராக டேவிட் அண்ணாத்துரை நியமனம்

அ.ம.மு.க. தெற்கு மாவட்டசெயலாளராக டேவிட் அண்ணாத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்‌.
அ.ம.மு.க. தெற்கு மாவட்டசெயலாளராக டேவிட் அண்ணாத்துரை நியமனம்
Published on

மதுரை

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. செய லாளராக டேவிட் அண்ணா துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்த மகேந்திரன் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

அ.தி.மு.க.விற்கு மகேந்திரன் தாவியதை அடுத்து மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய செயலாளராக கா.டேவிட் அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் என்பது குறிப் பிடத்தக்கது.

இவர் அ.ம.மு.க. வில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராகவும், ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

புதிய மாவட்ட செய லாளராக டேவிட் அண்ணா துரையை நியமித்து கட்சியின் பொதுச் செயலா ளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட த்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 சட்டசபை தொகுதி கள் வருகின்றன.

எனவே புதிய மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டேவிட் அண்ணாதுரைக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்து ழைப்பை நல்கிட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக சரவணன் நியமிக்கப்பட் டுள்ளார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com