தஞ்சை அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு

அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.விழாவில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.
தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்களுக்கு மாநகர தி.மு.க. சார்பில் மதிய உணவை துைர.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்களுக்கு மாநகர தி.மு.க. சார்பில் மதிய உணவை துைர.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
Published on

தஞ்சாவூர்:

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலா ளருமான உதயநிதிஸ்டாலின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகர தி.மு.க. சார்பில் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் ஏற்பாட்டில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, பகுதி செயலாளர்கள் சதாசிவம், மேத்தா, நீலகண்டன், கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணிகண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா, மாநகர பொருளாளர் காளையார் சரவணன், கவுன்சிலர்கள் உஷா, அண்ணா.பிரகாஷ், லெனின். இளைஞரணி வாசிம்ராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com