தி.மு.க.மாவட்ட செயலாளர் தேர்வு - கடையம் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சிவபத்பநாதன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடையம் பஸ் நிலையம் பகுதியில் தி.மு.க. சார்பாக பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தி.மு.க.வினர்.
பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தி.மு.க.வினர்.
Published on

கடையம்:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சிவபத்பநாதன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கடையம் பஸ் நிலையம் பகுதியில் தி.மு.க. சார்பாக பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

செல்லப்பிள்ளையார் குளம் தி.மு.க. நிர்வாகி பழக்கடை நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சங்கர் முன்னிலை வகித்தார். இதில் தெற்கு கடையம் மதன்ஸ், சுரேஷ், ராஜாங்கபுரம் சிங்ககுட்டி, புங்கம்பட்டி ராஜபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com