பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

ராஜிவ்காந்தி பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.ராஜிவ்காந்தி தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
Published on

கோவை,

நீலகிரியை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி (வயது 40). இவர் கோவை பெரியநாயக்கன ்பாளையம் அடுத்த மத்தம்பாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று ராஜிவ்காந்தி அளவுக்கு அதிகமாக மதுகுடித்தார். பின்னர் மத்தம்பாளையம் கருணவிநாயகர் கோவில் அருகே நடந்து வந்தார்.

அப்போது அங்கிருந்த பாலம் அருகே வந்த போது திடீரென ராஜிவ்காந்தி தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார்.

அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலிசார் சம்பவ இடத்துக்க வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com