புதுவை, காரைக்காலில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற 526 மாணவர்கள்

புதுவை, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.526 மாண வர்கள் 100-க்கு 100 மதிப் பெண் பெற்றுள்ளனர்.
புதுவை, காரைக்காலில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற 526 மாணவர்கள்
Published on

புதுச்சேரி, மே.6-

புதுவை, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதில் புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 526 மாணவர்கள் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இயற்பியல் 9, வேதியியல் 3, உயிரியல் 4, கணிப்பொறி அறிவியல் 165, கணிதம் 20, விலங்கியல் 1, பொருளியல் 22, வணிகவியல் 81, கணக்கு பதிவியல் 15, வணிக கணிதம் 1, கணிப்பொறி பயன்பாடு 69, மனையியல் 1, பிரெஞ்சு 135 என மொத்தம் 526 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் கணிப்பொறி அறிவியல் 9, கணிதம் 1, பொருளியல் 1, வணிகவியல் 3, கணிப்பொறி பயன்பாடு 3, மனையியல் 1, பிரெஞ்சு 2 என மொத்தம் 20 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com