மாவட்ட செயலாளர் தம்பி விபத்தில் மரணம்: மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுகவனத்தின் தம்பி விபத்தில் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.
மாவட்ட செயலாளர் தம்பி விபத்தில் மரணம்: மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
Published on

பர்கூர்:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுகவனத்தின் தம்பி வீரராகவன் கடந்த 17-ந் தேதி பர்கூர் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள எமக்கல்நத்தம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த வீரராகவனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, சுகவனம், அவரது தாயார் மணிமேகலை, இறந்த வீரராகவனின் மனைவி சாந்தி, மகன் ஆகாஷ், மகள் அகல்யா ஆகியோருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணி, எம்.எல்.ஏ.க்கள் அன்பில்மகேஷ், ராஜேந்திரன், செல்வம், நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்.எல்.ஏ., தர்மபுரி மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ., வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ., மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசு, பேரூர் செயலாளர் பாபு, டாக்டர் மாலதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com