குரங்கணி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. #TheniFire #kuranganiforestfire
குரங்கணி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
Published on

மதுரை:

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி தீப்பிடித்தது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தீக்காயம் அடைந்தவர்கள், மதுரை, கோவை, சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 12 பேர் அடுத்தடுத்து இறந்து போனார்கள்.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சிவசங்கரி (வயது 26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் குரங்கணி தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது. #TheniFire #kuranganiforestfire

X

Maalai Malar
www.maalaimalar.com