இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு தலாய்லாமா பாராட்டு

இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு திபெத்தை சேர்ந்த புத்த மத தலைவரான தலாய் லாமா புகழாரம் சூட்டினார்.
இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு தலாய்லாமா பாராட்டு
Published on

தர்மசாலா:

திபெத்தை சேர்ந்த புத்த மத தலைவரான தலாய்லாமா இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள பிரதான திபெத்திய கோவிலில் திபெத் இளைஞர்களுக்கு மத போதனையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் இந்தியாவின் மதச்சுதந்திரம் மற்றும் மதச் சார்பின்மைக்கு புகழாரம் சூட்டினார். இந்தியா, அனைத்து மதங்களையும் மதித்து, ஊக்குவிப்பதுடன் அனைவரின் மத நம்பிக்கைகளுக்கும் சுதந்திரம் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் உலகம் முழுவதும் புத்த மதம் பரவ காரணமான பண்டைய நாலந்தா பல்கலைக் கழகத்துக்கு எதையும் திரும்ப செய்ய முடியவில்லையே என்றும் அவர் வருந்தினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com