தங்கம் வென்றார் ஜித்து ராய் - காமன்வெல்த் போட்டியில் 3ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா

காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய் தங்கம் வென்று அசத்தினார். இதனை அடுத்து பதக்க பட்டியலில் இந்தியா 3ம் இடத்திற்கு முன்னேறியது. #CWG18 #CG2018 #JituRai
தங்கம் வென்றார் ஜித்து ராய் - காமன்வெல்த் போட்டியில் 3ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா
Published on

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்தியா ஏற்கனவே 7 தங்கம் வென்றுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.

இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜித்துராய் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலப் பதக்கம்  வென்றார்.

இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. 31 தங்கம் வென்றுள்ள ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. #CWG18 #CG2018 #JituRai

X

Maalai Malar
www.maalaimalar.com