கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் இருந்து ஒரு ராணுவ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 8 பேர் பயணம் செய்தனர்..அந்த விமானம் ஹவானாவில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் பறந்த போது லோமா டி லா பிமென்டா மலையில் மோதி நொறுங்கியது.