கொரோனா தடுப்பு நடவடிக்கை- சட்டசபை வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பு

சட்டசபை வளாகத்தை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் தலைமைச்செயலக வளாகம் ஆகிய இடங்களில் இன்று 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமைச் செயலக வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்
தலைமைச் செயலக வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்
Published on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதில் கொரோனா அறிகுறி தெரிந்தால் அவர்களை சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.

கொரோனா பரவாமல் தடுக்க பஸ், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்கள், பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் தலைமைச்செயலக வளாகம் ஆகிய இடங்களில் இன்று 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் சட்டசபை வளாகம் முழுவதும் மருந்து தெளிக்கும் பணி நடந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com