சிறைக்கைதிகள் தயாரித்த 2 ஆயிரம் முக கவசங்கள்

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுமார் 50 கைதிகள், கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள அணியும் முக கவசங்களை தயாரித்துள்ளனர்.
முக கவசங்கள்
முக கவசங்கள்
Published on

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுமார் 50 கைதிகள், கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள அணியும் முக கவசங்களை தயாரித்துள்ளனர். மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டதன்பேரில், 2 ஆயிரம் முக கவசங்களை உருவாக்கி உள்ளனர்.

தலைமை சுகாதார அதிகாரி ஆய்வு செய்து, அவை தரமானதாக இருப்பதாக சான்று அளித்துள்ளார். முக கவசத்துக்கான காட்டன் துணியை சிறையில் உள்ள விசைத்தறியிலேயே நெய்துள்ளனர். ஒரு முக கவசத்தின் விலை 7 ரூபாய் என்ற அடிப்படையில், சுகாதாரத்துறைக்கு வினியோகிக்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com