லல்லு வார்டில் இருந்தவருக்கு கொரோனா பாதிப்பு- விடுதலை செய்ய காங்கிரஸ் கோரிக்கை

லல்லு வார்டில் இருந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் லல்லுவை பரோலில் விடுதலை செய்ய கோரி காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
லல்லு
லல்லு
Published on

ராஞ்சி:

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டணை விதிக்கப்பட்ட லல்லு பிரசாத் யாதவ் தற்போது ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் லல்லு வார்டில் இருந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து லல்லுவுக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் தொற்று ஏற்பட்ட சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதன் காரணமாக லல்லுவை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று காங்கிரசும், அவரது மகன் தேஜஸ்வி யாதவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com