காங். எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் ஜனார்த்தன ரெட்டி - ஆடியோ ஆதாரம் வெளியிட்டது காங்கிரஸ்

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் ஜனார்த்தன ரெட்டி தொடர்பான ஆடியோ ஆதாரத்தை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. #KarnataElection2018 #Congress #AudioRelease
காங். எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் ஜனார்த்தன ரெட்டி - ஆடியோ ஆதாரம் வெளியிட்டது காங்கிரஸ்
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்த அவர், இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தும் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. எனவே, கவர்னரை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ராய்ச்சூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, அது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை இன்று வெளியிட்டது.

அந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி பேசுகையில், பணம், மந்திரி பதவி மற்றும் பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்திக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என பாஜக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். #KarnataElection2018 #Congress #AudioRelease

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com