செய்திகள்
வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையத்தை எதிர்த்து இமாச்சல் காங்கிரஸ் மூத்த தலைவர் வழக்கு
இமாச்சல் சட்டசபை தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் வித்யா ஸ்டோக்ஸ் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார்.
இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருப்பவர் வித்யா ஸ்டோக்ஸ் (89). கடந்த 1982 முதல் பல முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தியோக் தொகுதியில் தனக்கு சீட் கேட்டு கட்சி மேலிடத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால், வித்யாவுக்கு பதிலாக வேறு ஒருவருக்கு கட்சி சீட் வழங்கியது. எனினும், வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், தியோக் தொகுதிக்கு வித்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, வித்யா ஸ்டோக்ஸ் அவசர அவசரமாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யாததால் வித்யாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்தனர்.

