காந்திநகர் தொகுதியில் அமித்ஷாவை எதிர்த்து காங். எம்.எல்.ஏ. போட்டி

காந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சி.ஜே. சாவ்தா எம்.எல்.ஏ. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார். #LoksabhaElections2019 #CJChavda
காந்திநகர் தொகுதியில் அமித்ஷாவை எதிர்த்து காங். எம்.எல்.ஏ. போட்டி
Published on

அகமதாபாத்:

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை ஒரங்கட்டி விட்டு அவர் அந்த தொகுதியில் களம் இறங்குகிறார்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் போட்டியிடும் மேலும் 4 வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. காந்திநகர் தொகுதியில் சி.ஜே. சாவ்தா எம்.எல்.ஏ. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

சாவ்தா காந்தி நகர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அமித்ஷாவுக்கு தான் கடும் போட்டியாக விளங்குவேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

அகமதாபாத் கிழக்கு தொகுதியில் இட ஒதுக்கீடு போராட்ட குழு தலைவரான ஹர்த்திக் படேலுக்கு நெருக்கமானவரான கீதா படேல் நிற்கிறார்.

ஹர்த்திக் படேல் போட்டியிடலாம் என்று எதிர் பார்க்கப்பட்ட ஜாம்நகர் தொகுதியில் முருபாய் கண்டேரியா போட்டியிடுகிறார். ஹர்த்திக் படேல் மீது வழக்கு இருப்பதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ளன. இதில் 18 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. மீதமுள்ள தொகுதிகளுக்கு காங்கிரஸ் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் ஏப்ரல் 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. #LoksabhaElections2019 #CJChavda

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com