செய்திகள்
காமன்வெல்த் 2018: சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனை
காமன்வெல்த் சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆண்கள் அணிகளுக்கான 4 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 நிமிடம் 49.804 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணி 3 நிமிடம் 50.265 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே உலக சாதனையாக இருந்தது.

