பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் நிதிஷ்குமார்

பீகாரில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல் மந்திரி நிதிஷ்குமார் பார்வையிட்டார்.
வெள்ளத்தை பார்வையிடும் நிதிஷ்குமார்
வெள்ளத்தை பார்வையிடும் நிதிஷ்குமார்
Published on

பாட்னா:

பீகாரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைப் போக்குவரத்தும் தூண்டிக்கப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். 

இதற்கிடையே, பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், பீகாரில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல் மந்திரி நிதிஷ்குமார் பார்வையிட்டார்.

இதுதொடர்பாக, முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் அதிகம் பாதிப்பு அடைந்த பகல்பூர், தர்பங்கா, முங்கர், புர்னியா மற்றும் கோசி உள்ளிட்ட பகுதிகளை முதல் மந்திரி நிதிஷ்குமார் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com