முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17-ந்தேதி திருவள்ளூர் வருகை

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 17-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

திருவள்ளூர்:

முதல்-அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று அந்த மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து, முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார்.

அதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 17-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்கிறார். அதனை தொடர்ந்து 20-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களிலும், 21-ம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com