சீனாவின் வுகான் குறைந்த அபாய பகுதியாக அறிவிப்பு

கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா தொற்று எவருக்கும் ஏற்படாத காரணத்தால் சீனாவின் வுகான் நகரம் குறைந்த அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பாதுகாப்பு
கொரோனா வைரஸ் பாதுகாப்பு
Published on

பீஜிங்:

சீனாவின் உகான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் உருவானது. தற்போது அங்கு இயல்புநிலை திரும்பி வருவதால், வுகான் நகரம், குறைந்த அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படாத பகுதிகள், குறைந்த அபாய பகுதிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையே, புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 9 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் ஆவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com