மனைவியுடன் பேட்மிண்டன் விளையாடி நேரத்தை செலவிடும் புஜாரா

லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள்ளேயே இருப்பதால் புஜாரா பேட்மிண்டன் விளையாடுவதுடன் அவரது மனைவிக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார்.
புஜாரா அவரது மனைவியுடன் பேட்மிண்டன் விளையாடுகிறார்
புஜாரா அவரது மனைவியுடன் பேட்மிண்டன் விளையாடுகிறார்
Published on

கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வீட்டிற்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

இளம் வீரர்கள் தங்களது தாயார்களுக்கு வீட்டு வேலை, தோட்ட வேலைகளில் உதவி செய்கிறார்கள். திருமணம் ஆனவர்கள் தங்களுடைய மனைவிகளுக்கு வீட்டிவேலை செய்வதில் உதவி செய்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுகின்றனர்.

புஜாரா அவரது மனைவியுடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடி நேரத்தை கழித்து வருகிறார். புஜாரா மனைவி பூஜாவிற்கு பேட்மிண்டன் விளையாட தெரியவில்லை என்றாலும், சேர்-ஐ நெட்டாக மாற்றி பயிற்சி கொடுத்து தேற்றியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com