சென்னையில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக சென்னையில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை:

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியததாவது:-

தமிழகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாகவும் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னை நகரில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் மேற்கு பருவமழையானது தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 8 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது சராசரி மழை அளவான 12 செ.மீ. விட 28 சதவீதம் குறைவு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com