ஜெ. சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட வெற்றி வேலின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ. சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெற்றிவேல் வெளியிட்டார். வெற்றிவேல் வெளியிட்ட சில மணி நேரத்துக்குள் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பர பரப்பாக பரவின. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தொலைக்காட்சிகளில் அந்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பானது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் வெற்றிவேல் மீது புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகார்களை ஒருங்கிணைத்து வெற்றிவேல் மீது அண்ணா சதுக்கம், திருவல்லிக்கேணி, தண்டையார் பேட்டை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் முடிந்ததும் வெற்றிவேல் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது.

இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிவேல் இன்று மனு தாக்கல்  செய்தார். இந்நிலையில், அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com