ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய பெண் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த அல்கா லம்பா
காங்கிரஸ் கட்சியில் இணைந்த அல்கா லம்பா
Published on

புதுடெல்லி:

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி சார்பில் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு அல்கா லம்பா எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.

இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அல்கா லம்பா அக்கட்சியில் இருந்து விலகினார்.

விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என தகவல் வெளியானது. மேலும், அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து கடந்த மாதம் சபாநாயகர் உத்தரவிட்டார். 

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய அல்கா லம்பா, தலைநகர் டெல்லியில் மாநில தலைவர் பி.சி.சாக்கோ முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com