விவசாயிகள் வருவாய் இரு மடங்கு அதிகரிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக பெருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
விவசாயிகள் வருவாய் இரு மடங்கு அதிகரிக்கும்: பிரதமர் மோடி பேச்சு
Published on

டெல்லியில் இன்று காலை நடந்த உலக உணவு கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக அளவில் இந்தியாவின் வர்த்தகம் 130-வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு இந்தியாவின் வர்த்தகம் உலக அளவில் 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பல முனைவரிகள் அகற்றப்பட்டு சரக்கு மற்றும் சேவை வரிகள் அமல்படுத்தப்பட்ட பின்பு இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தியாவில் உணவு பதப்படுத்துதல் தொழில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்தால் நல்ல வாய்ப்பு உள்ளது. இங்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வேளாண்மை தொடர்பான தொழிலில் அதிக முதலீடுகள் செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்.


இயற்கை உணவு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடாக தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக பெருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பாரம்பரியமிக்க இந்திய உணவு வகைகளில் நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி நாம் வெற்றிமேல் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளையும் தீர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com