மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துஉள்ளார்.
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
Published on

தேசம் வெல்ல தேசியக் கல்விக் கொள்கை... என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துஉள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

''பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்காது என மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com