7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி- அமைச்சர் பாண்டியராஜன்

கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
அமைச்சர் பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்
Published on

சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு  தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சித்த மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:

பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக்கூடியது.  தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனை நிரூபிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் இதுவரை 80% பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

பிற மாவட்டங்களிலும் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com