தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனை

தமிழ்நாட்டில் தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனை
Published on

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுற்று வட்டார பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனையை நடத்த எண்ணெய் நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.), மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இதில் தஞ்சை மாவட்டத்தில் 5 கிணறுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கிணறுகளும், அரியலூர் மாவட்டத்தில் 6 கிணறுகள், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிணறு என மொத்தம் 21 கிணறுகள் சோதனைக்காக தோண்டப்பட உள்ளன.

மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்தவில்லை என்று எண்ணெய் நிறுவனத்துக்கு, தமிழக அரசு பிரமாண பத்திரம் வழங்கியதாக தெரிகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com